மோகனூர் பகுதியில், பள்ளி மாணவி கடத்தல் - 2 வாலிபர்கள் கைது


மோகனூர் பகுதியில், பள்ளி மாணவி கடத்தல் -  2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 13 Aug 2019 4:15 AM IST (Updated: 13 Aug 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

மோகனூரில் பள்ளி மாணவியை கடத்தியது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மோகனூர்,

மோகனூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் ஒரு தம்பதியின் மகள் கடந்த மாதம் திடீரென மாயமானார். இதையடுத்து அவரை பெற்றோர் அக்கம் பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும், மாணவியின் தோழியின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதில் எங்களது மகளை வளையபட்டியை சேர்ந்த ராம்குமார் (வயது 22) என்பவர் கடத்தி சென்றுவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தருமாறும் கூறியிருந்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ராம்குமார் தனது உறவினரான அரியலூரில் உள்ள மாரிமுத்து (24) என்பவரது வீட்டில் மாணவியுடன் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அரியலூர் சென்று 3 பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பள்ளி மாணவியை கடத்திய ராம்குமார் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக மாரிமுத்து ஆகியோரை போக்சோ பிரிவின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாள்.

Next Story