மாவட்ட செய்திகள்

கெலமங்கலத்தில், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை + "||" + In kelamankalat, Young woman commits suicide by drinking poison

கெலமங்கலத்தில், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

கெலமங்கலத்தில், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
கெலமங்கலத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளி அருகே உள்ள தொட்டபிலிமுத்திரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவரது மகள் திவ்யா (22). இவருக்கும், கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் திவ்யா அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக திவ்யா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் திவ்யா நேற்று இறந்தார். இது குறித்து அவரது தந்தை சிவக்குமார் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் திவ்யாவின் தற்கொலை தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன் விசாரணை நடத்தி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஊ.மங்கலம் அருகே இளம்பெண், விஷம் குடித்து தற்கொலை
ஊ.மங்கலம் அருகே வீட்டுவேலை செய்யாததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. திருக்கோவிலூர் அருகே, இளம்பெண், விஷம் குடித்து தற்கொலை
திருக்கோவிலூர் அருகே சமையல் செய்யாததை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.