மாவட்ட செய்திகள்

திருப்பூர் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்ற வேண்டும்; மாநகர போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோரிக்கை + "||" + At the Tirupur railway station complex The suspended vehicles must be removed

திருப்பூர் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்ற வேண்டும்; மாநகர போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோரிக்கை

திருப்பூர் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்ற வேண்டும்; மாநகர போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோரிக்கை
திருப்பூர் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குக்குட்பட்ட பகுதிகளில் திருப்பூர் வடக்கு, தெற்கு, மத்திய, ஊரகம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், பூண்டி, வீரபாண்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்கள் போலீஸ் நிலைய வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்படும். போதிய இடம் இல்லாத போலீஸ் நிலையங்களில் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் வளாகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.


அந்த வகையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் ஒரு பகுதி போலீஸ் நிலைய வளாகத்திலும், மீதமுள்ள நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்தும் இடம் மற்றும், பிற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இங்கு, மொத்தம் 130 வாகனங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள், மழை, வெயிலில் சேதமடைந்து, உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

மேலும், பெரும்பாலான இடத்தை அந்த வாகனங்கள் ஆக்கிரமித்து இருப்பதால், ரெயில்வே நிர்வாகமும், வாகன நிறுத்தும் இட குத்தகைதாரர்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால், பறிமுதல் வாகனங்களை ரெயில்வே நிலைய வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைஎடுக்க ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், வடக்கு போலீஸ் நிலையத்திற்கு கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ரெயில்வே வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளபறிமுதல் வாகனங்களை அப்புறப்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. கோரிக்கை மனு மீது, உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு போலீசார்தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து மன்னார்குடியில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து மன்னார்குடியில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. குன்னத்தில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.
3. பிடிபட்ட கொள்ளையன் முருகனிடமிருந்து நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்கம்- வைர நகைகள் பறிமுதல்
பிடிபட்ட கொள்ளையன் முருகனிடமிருந்து திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்க- வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
4. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சம் வெள்ளி கொலுசுகள், மெட்டிகள் பறிமுதல்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான கொலுசுகள், மெட்டிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5. வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,400 கிலோ ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,400 கிலோ ரே‌‌ஷன் அரிசியை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...