மாவட்ட செய்திகள்

மதுரையில் 2 இடங்களில் பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து 30½ பவுன் நகை, பணம் திருட்டு + "||" + Jewelry and money theft by breaking the door of the houses

மதுரையில் 2 இடங்களில் பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து 30½ பவுன் நகை, பணம் திருட்டு

மதுரையில் 2 இடங்களில் பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து 30½ பவுன் நகை, பணம் திருட்டு
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வீடுகளின் கதவை உடைத்து 30½ பவுன் நகை, பணம் திருடப்பட்டது.
மதுரை,

மதுரை அண்ணாநகர், கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் தவமணி. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவரது மனைவி சுசீலா (வயது 53). இவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தவமணி இறந்து விட்டார். எனவே சுசீலா மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.


இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு காசிக்கு சென்றார். எனவே அவரது வீடு வெகுநாட்களாக பூட்டி கிடந்தது. இந்தநிலையில் சுற்றுலா சென்று விட்டு சுசீலா வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 30 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது. உடனே அவர் இது குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் அந்த வீட்டில் பதிவான கைரேகை தடயங்களை சேகரித்தனர். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

மதுரை புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்(67). இவரது உறவினர் வீடு நரிமேடு பகுதியில் உள்ளது. அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் அந்த வீட்டை பார்ப்பதற்காக ஜெயபால் சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்த அரை பவுன் தங்க மோதிரம், டி.வி. மற்றும் 5 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை நகரில் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகாரித்து வருகிறது. எனவே போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை