மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி பசுவை வெட்டுவதற்கு பா.ஜனதா, இந்து முன்னணி எதிர்ப்பு + "||" + BJP, Hindu Front protests to cut cow at Pagrid festival

பக்ரீத் பண்டிகையையொட்டி பசுவை வெட்டுவதற்கு பா.ஜனதா, இந்து முன்னணி எதிர்ப்பு

பக்ரீத் பண்டிகையையொட்டி பசுவை வெட்டுவதற்கு பா.ஜனதா, இந்து முன்னணி எதிர்ப்பு
பக்ரீத் பண்டிகையையொட்டி பசுவை வெட்டுவதற்கு பா.ஜனதா, இந்து முன்னணி எதிர்ப்பு.
பொன்மலைப்பட்டி,

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடினர். இதேபோல திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனியில் உள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பண்டிகையையொட்டி பசுமாடு வெட்ட இருப்பதாக இந்து முன்னணியினருக்கு தகவல் கிடைத்தது.


அதன் அடிப்படையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் திருவெறும்பூர் மண்டல பா.ஜ.க. தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் ராஜராஜன் மற்றும் நிர்வாகிகள் சிலர் பூலாங்குடியில் உள்ள பள்ளிவாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு பெல் போலீஸ் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்து முன்னணியினர், பசுக்களை இந்துக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அதனை, வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதற்கு, போலீஸ் அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்ரே இச்சம்பவம் குறித்து முன்கூட்டியே புகார் கொடுத்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். வருங்காலத்தில் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததின்பேரில், இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.