நீலகிரி மாவட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மும்முரம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


நீலகிரி மாவட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மும்முரம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2019 11:15 PM GMT (Updated: 12 Aug 2019 10:33 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை,

தமிழக முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர்ஓ.பன்னீர் செல்வம்ஆகியோர் சென்னையில்இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 8மணிக்கு கோவைவந்தனர்.

அவர்களுக்கு அமைச்சர்கள்கே.ஏ.செங்கோட்டையன்,எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமிநிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டமழை பாதிப்புகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், நிலச்சரிவால் ஏற்பட்டபாதிப்புகளை பார்வையிட்டு தேவையானநடவடிக்கைஎடுக்க துணைமுதல்-அமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் நீலகிரிமாவட்டத்துக்கு செல்கிறார்.

அங்குள்ள பகுதிகளை அவர்முழுமையாக பார்வையிட்டபின்னர் சேத மதிப்புகள் கணக்கிடப்படும். நீலகிரியில் மழை பெய்த மறுநாளே வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அங்கு சென்றுநிவாரண பணிகளைமுடுக்கிவிட்டார்.

ஆனால்மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேடத்தான் நீலகிரி சென்று உள்ளார். அவர் ஒருநாள்தான் அங்கு செல்வார். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. அங்கேயே இருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் அளிப்போம்.

கனமழையால்பாதிக்கப்பட்டஇடங்களை சரிசெய்யஅரசு துரிதநடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அத்துடன் பாதிக்கப்பட்டமக்களுக்கு தேவையானநிதி ஒதுக்கி,அவர்களுக்கு தேவையானஅனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

கனமழையால்பல இடங்கள் சேதமாகி உள்ளது.எவ்வளவு சேதமாகிஉள்ளது என்பதும் அதன் மதிப்பு என்பதும் தெரியவில்லை. மதிப்பீடு தெரிந்த பின்னரே மத்திய அரசிடம் நிதி கேட்க முடியும். தமிழக மக்களுக்குதி.மு.க. கூட்டணி நல்லது செய்தது இல்லை.நாட்டு மக்களுக்கு மத்திய அரசு நல்லதிட்டத்தை கொண்டுவந்துஅதை செயல்படுத்தி வருகிறது. இதனால் அதற்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கிறது.கஜாபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குநிவாரண பணிகளைஉடனடியாக முடுக்கி விட்டோம் ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படி அல்ல, அங்கு சென்றுபார்வையிட்டு தன்னைவிளம்பரப்படுத்துவார். பேட்டியளிப்பார். அதோடு முடிந்து விடும்.

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்துதமிழகத்துக்கு காவிரிஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. கொள்ளிடம் ஆற்றில்முக்கொம்புஅணைஉடைந்தது சரிசெய்யாமல்இருப்பதால்கடைமடைபகுதிக்கு தண்ணீர்செல்லாது என்றுகூறுவது தவறானகருத்து.

கொள்ளிடம் ஆற்றில் இதுவரை 70 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.மீதமுள்ள தூண்கள்அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தண்ணீர் வீணாகாமல் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி, மேட்டூர்அணையை திறப்பதற்காக கார்மூலம் சேலம் சென்றார். துணை முதல்-அமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் கார் மூலம்ஊட்டிக்கு சென்றார்.

இந்த நிகழ்ச்சியில்ஏ.கே.செல்வராஜ்எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள்அம்மன் அர்ச்சுனன்,பி.ஆர்.ஜி.அருண்குமார்,வி.சி.ஆறுக்குட்டி, கந்தசாமி,ஓ.கே.சின்னராஜ்,எட்டிமடை சண்முகம், முன்னாள்எம்.பி. தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story