மாவட்ட செய்திகள்

சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - 3 பேர் கைது + "||" + In Salem Claiming to buy work abroad Rs 2 lakh fraud for farmer - 3 arrested

சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - 3 பேர் கைது

சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - 3 பேர் கைது
சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்,

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 54), விவசாயி. இவருடைய மகன் பிரபாகரன். இவர் பி.இ. படித்துள்ளார். ராஜாவுக்கு தனது நண்பர்கள் மூலம் சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த காந்தி கண்ணன்(41) என்பவர் அறிமுகமானார்.


அப்போது அவர் ராஜாவிடம் அவருடைய மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய அவர் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே வைத்து காந்தி கண்ணனிடம் ரூ.2 லட்சம் கொடுத்தார். இதையடுத்து காந்தி கண்ணன் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

இந்த மோசடி குறித்து ராஜா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ராஜாவிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த காந்தி கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக காடையாம்பட்டியை சேர்ந்த கருணாநிதி(63), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன்(61) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
2. சேலத்தில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
சேலத்தில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார். இவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. சேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
சேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
4. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 82 அடியை எட்டியது
மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
5. சேலம் நிதி நிறுவன அதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
சேலம் அருகே நிதி நிறுவன அதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடியபோது போலீசார் அவரை பிடித்தனர்.