மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும் + "||" + The express train from Nagercoil will depart CSMT today

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும்
மும்பையில் பெய்த கனமழையால் கர்ஜத்- லோனவாலா இடையே தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒருவாரமாக மும்பை- புனே இடையே நீண்டதூர ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மும்பை, 

திருநெல்வேலி சாளுக்கியா எக்ஸ்பிரஸ் புனேயிலும், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் டாவுன்ட் ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டு அங்கிருந்தே மறுமார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்தநிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்16351) மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

இந்த ரெயில் தானேயில் இருந்து பன்வெல்-மட்காவ்-மங்களூரு ஜங்ஷன்- சோரனூர் ஜங்ஷன்-பாலக்காடு ஜங்ஷன்-திண்டுக்கல், மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும்.