மாவட்ட செய்திகள்

அஜித் பவாரின் பண்ணை வீட்டில் பயங்கர தீ + "||" + Ajith Pawar's farm house set on fire

அஜித் பவாரின் பண்ணை வீட்டில் பயங்கர தீ

அஜித் பவாரின் பண்ணை வீட்டில் பயங்கர தீ
புனே அருகே அஜித் பவாரின் பண்ணை வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்,அங்குள்ள கொட்டகை எரிந்து நாசமானது.
புனே,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித் பவாருக்கு சொந்தமான பண்ணை வீடு புனேயில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள முல்ஷி பகுதியில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு திடீரென அந்த பண்ணை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கிருந்த கொட்டகை கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி மற்றும் வேலைக்காரர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் கொட்டகை முற்றிலுமாக எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பவாரின் பண்ணை வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை