கர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசு
கர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசை சிவசேனா இளைஞர் அணி வழங்கியது
மும்பை,
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள விரார் ரெயில் நிலையத்தில் நின்ற மின்சார ரெயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, ரெயில் நிலையத்திற்கு வெளியே சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ டிரைவர் சாகர் கம்லாகர் கவாட் (வயது34) என்பவர் இதை அறிந்ததும் சற்றும் தாமதிக்காமல் தனது ஆட்டோவை ரெயில் நிலைய பிளாட்பாரத்திற்குள் ஓட்டிச்சென்று அந்த கர்ப்பிணியை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார். ரெயில் நிலைய பிளாட்பாரத்துக்குள் வாகனங்கள் வருவது குற்றம் என்பதால் அவர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்தநிலையில், கர்ப்பிணிக்காக ரெயில் நிலையத்திற்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்ற சாகர் கம்லாகர் கவாட்டியின் மனிதாபிமானத்தை பாராட்டும் வகையில் சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தார். அதற்கான காசோலையை விரார் பகுதி சிவசேனா இளைஞரணி நிர்வாகிகள் சாகர் கம்லாகர் கவாட்டின் வீட்டுக்கு சென்று அவரிடம் வழங்கினார்கள்.
Related Tags :
Next Story