வங்கி கணக்கு விவரங்களை திருட புதிய உத்தியை கையாளும் மோசடி ஆசாமிகள் - போலீஸ் அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


வங்கி கணக்கு விவரங்களை திருட புதிய உத்தியை கையாளும் மோசடி ஆசாமிகள் - போலீஸ் அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 10:45 PM GMT)

வங்கி கணக்கு விவரங்களை திருட மோசடி ஆசாமிகள் புதிய உத்தியை கையாளுவதாக போலீஸ்அதிகாரிஅதிர்ச்சி தகவலைவெளியிட்டுள்ளார்.

கோவை,

வங்கி ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமராக்களை பொருத்தி அதன் மூலம் ஏ.டி.எம். கார்டுகளின் தகவல்களை மோசடி ஆசாமிகள் திருடி வருகிறார்கள்.அந்த தகவல்களை கொண்டு போலி ஏ.டி.எம். கார்டுகளையும், மைக்ரோ கேமராக்களில் பதிவாகும் பின்நம்பரை கொண்டு மற்றவர்களின் வங்கி கணக்கில் உள்ள பணம் அபகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிப்ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி உள்ளதால் அதில்உள்ள தகவல்களை ஸ்கிம்மர் கருவி மூலம் திருடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வங்கி கணக்கு எண் உள்பட பல்வேறு தகவல்களை திருடுவதற்கு மோசடி ஆசாமிகள் புதிய உத்தியை கையாண்டு வருகிறார்கள். இது தெரியாமல் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குஎண், ரகசிய எண் மற்றும் ஏ.டி.எம். கார்டு எண்களை அளித்து விடுகிறார்கள்.அந்த தகவல்களைவைத்து மோசடி ஆசாமிகள் வங்கிகளில்உள்ள பணத்தை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் எடுத்து விடுகிறார்கள்.

இதுகுறித்து கோவைமாநகர போலீஸ்அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மற்றவர்களின் வங்கி தகவல்களை திருடுவதற்கு இணைய தள திருடர்கள் தற்போது புதிய வழிமுறையை கையாளுகிறார்கள். அதன்படி பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு தகவல் அனுப்புகிறார்கள்.

அதில் வருமானவரித்துறையில் இருந்து உங்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.15 ஆயிரம் வந்துள்ளது. அந்த தொகை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. அந்த கணக்குஎண் சரியாக இல்லையென்றால் சரியான வங்கி கணக்கு எண்ணை இந்த இணையதளத்தில் அனுப்புங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் அந்த இணையதளத்தில் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை அளித்தால் அதை பயன்படுத்தி வங்கியில் உள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் திருடி விடுவார்கள். எனவே இதுபோன்றஎஸ்.எம்.எஸ். தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வருமானவரித்துறையில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது என்று வருமானவரித்துறை எந்த தகவலையும் அனுப்பாது. ஏனென்றால் வருமானவரித்துறையிடம் ஏற்கனவே வங்கி கணக்கு இருக்கும். எனவே அந்த வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை கணினியே செலுத்தி விடும்.

தனி நபர்வங்கி கணக்கு தகவல்களை வருமானவரித்துறையோ, வங்கிகளோ ஒருபோதும் கேட்பதில்லை. அப்படிவங்கி கணக்குஎண் விவரங்களை அளியுங்கள் என்று எஸ்.எம்.எஸ். வந்தால் அது ஏமாற்று வேலைஎன்பதை பொதுமக்கள்தெரிந்து கொள்ள வேண்டும். இதில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story