மாவட்ட செய்திகள்

மும்பையில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் + "||" + In Mumbai Bakrit festivel celebration

மும்பையில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

மும்பையில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
மும்பையில் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலாப்பூரில் முஸ்லிம்கள் கண்ணீர் மல்க தொழுகை செய்தனர்.
மும்பை, 

தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மும்பையில் மசூதிகள் மற்றும் திறந்தவெளிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இந்த சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக பாந்திரா ரெயில் நிலைய பகுதியில் நடந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.

அங்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் விதமாக சிறுவர்கள் 3 பேர் மூவர்ண தலைப்பாகை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஆடுகளை வெட்டி குர்பானி வழங்கினர். மேலும் மராட்டியத்தில் மழைவெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட் சம் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள கோலாப்பூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பங்கேற்ற முஸ்லிம்கள் கண்ணீர் மல்க தொழுகை செய்தனர். சிலர் தொழுகையின் போது கதறி அழுததையும் பார்க்க முடிந்தது.

இனி இப்படி ஒரு பேரி டர் ஏற்பட்டு விடக் கூடாது என அவர்கள் இறைவனை பிரார்த்தனை செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பக்ரீத் பண்டிகையில் பலியிட இருந்த 7 ஒட்டகங்கள் மீட்பு
பக்ரீத் பண்டிகையில் பலியிட இருந்த 7 ஒட்டகங்கள் மீட்கப்பட்டன.
2. பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள பள்ளி வாசல்களில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது.
3. பக்ரீத் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
4. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
5. இன்று பக்ரீத் பண்டிகை: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.