மாவட்ட செய்திகள்

கோலாப்பூர், சாங்கிலியில் மக்கள் பரிதவிப்பு: மீட்பு-நிவாரண பணிகள் தீவிரம்; பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு + "||" + People are miserable Intensity of recovery-relief tasks Death toll rises to 43

கோலாப்பூர், சாங்கிலியில் மக்கள் பரிதவிப்பு: மீட்பு-நிவாரண பணிகள் தீவிரம்; பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

கோலாப்பூர், சாங்கிலியில் மக்கள் பரிதவிப்பு: மீட்பு-நிவாரண பணிகள் தீவிரம்; பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
மராட்டியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலாப்பூர், சாங்கிலியில் மக்களின் பரிதவிப்பு தொடர்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,

மராட்டியத்தின் மேற்கு மாவட்டங்களான கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப் பூரில் பலத்த மழை பெய்தது.

ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்கண்ட 5 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியது. இந்த மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

தற்போது மழை ஓய்ந்துவிட்ட நிலையிலும் சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங் கள் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 1,070 வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த 5 மாவட்டங்களிலும் மழைக்கு இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சாங்கிலியில் மட்டும் 21 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போய் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மழை ஓய்ந்த பின்பும் கிருஷ்ணா, பஞ்சகங்கா உள்ளிட்ட நதிகளில் தொடர்ந்து வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. கிருஷ்ணா நதியில் அபாய அளவான 45 அடியையும் தாண்டி 50 அடிக்கு மேல் வெள்ளம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுபோல பஞ்சகங்கா அணையில் அபாய அளவான 43 அடியை தாண்டி 47 அடிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் பல்வேறு சாலைகள் முடங்கியது. கடந்த ஒரு வாரமாக மூடிக்கிடந்த மும்பை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை நேற்று திறக்கப்பட்டது. இருப்பினும் கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே மற்றும் சோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 147 சாலைகளில் இன்னும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மராட்டிய மாவட்டங்களின் 761 கிராமங்கள் வெள்ளத்தில் பிடியில் சிக்கியுள்ளன. இங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சாங்கிலி மாவட்ட கலெக்டர் அபுஜித் சவுத்ரி கூறியதாவது:-

தற்போதைய நிலவரப்படி, சாங்கிலி மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 73 ஆயிரத்து 584 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 42 ஆயிரத்து 494 வீட்டு விலங்குகள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 14,891 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலை ஒரு வாரத்துக்கு பிறகு திறப்பு

மராட்டியத்தின் மேற்கு மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கோலாப்பூர் வழியாக செல்லும் மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலையை வெள்ளம் மூழ்கடித்தது. இதன் காரணமாக மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலையில் கடந்த ஒரு வாரமாக வாகன போக்குவரத்து முடங்கி இருந்தது. இந்தநிலையில், சாலையில் தேங்கியிருந்த வெள்ளம் வடிந்து உள்ளது. இதனால் நேற்று முதல் மீண்டும் மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து தொடங்கியது.


அதிகம் வாசிக்கப்பட்டவை