மாவட்ட செய்திகள்

பள்ளிகளில் யோகா ஆசிரியைகள் நியமிக்க வேண்டும் இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் + "||" + Resolution of Hindu Mother's Front State Executive Meeting to appoint Yoga Teachers in Schools

பள்ளிகளில் யோகா ஆசிரியைகள் நியமிக்க வேண்டும் இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

பள்ளிகளில் யோகா ஆசிரியைகள் நியமிக்க வேண்டும் இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்த ஆசிரியைகள் நியமிக்க வேண்டும் என்று இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலகிருஷ்ணன்புதூர்,

இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழு கூட்டம் நாகர்கோவில் கீழ காட்டுவிளை ஞான வித்யா மந்திர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆத்தி காட்டுவிளை மல்லிகை சிதம்பரநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் விஜய லட்சுமி, மாவட்ட செயலாளர் ராமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூங்கோதை ராஜதுரை, சிவகலாவதி முருகேசன், ராஜேஸ்வரி முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். வெள்ளிமலை சைதன்யானந்தஜி மகராஜ் சுவாமிகள் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், அரசுராஜா, பரமேஸ்வரன், மாநில இணை அமைப்பாளர்கள் பொன்னையா, ராஜேஷ், மாநில துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், பூசப்பன், மாநில செயலாளர் தாமு, மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாயக்கூத்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


யோகா ஆசிரியை

கூட்டத்தில், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்ட மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்த போதுமான ஆசிரியைகளை நியமிக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும், ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பை ஏற்படுத்தும் “நீட்“ தேர்வு அவசியம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் செல்லன், நெல்லை மாவட்ட கோட்ட செயலாளர் மிசா சோமன் ஆகியோர் செய்திருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2. துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் அதிகாரி அறிவுறுத்தல்
துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அதிகாரி அறிவுறுத்தினார்.
3. மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய கட்டிட வரைவுகளுக்கு மட்டுமே அனுமதி மத்திய அரசு கூடுதல் செயலாளர் தகவல்
மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய கட்டிட வரைவுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரமோத்குமார் பதக் கூறினார்.
4. நாகர்கோவிலில் தொட்டிப்பாலம் பூங்காவில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
தொட்டிப்பாலம் கட்டிய காமராஜருக்கு அங்குள்ள பூங்காவில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.