கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 5:06 PM GMT)

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கொந்தகை ஊராட்சி நடுப்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் அள்ளும் பணி தொடங்கியது.

இதனை அறிந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள், தஞ்சை மாவட்ட மாட்டுவண்டி மணல் தொழிலாளர் சங்க தலைவர் ஜெயபால் தலைமையில் சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் செல்வம், முருகன், ஆகியோர் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் குவாரி அமைத்து லாரிகளில் வெளியூர்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கியது போல், மாட்டுவண்டி தொழிலாளர்களாகிய தங்களுக்கும் மாட்டு வண்டி மூலம் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பாபநாசம் தாசில்தார் கண்ணன், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கோரிக்கை மனு வழங்கினர்.

கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் கண்ணன், இதுகுறித்து கும்பகோணம் ஆர்.டி.ஓ. விடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

Next Story