மாவட்ட செய்திகள்

டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: கல்லணையில் கலெக்டர் ஆய்வு + "||" + Water Opening for Delta Irrigation: The Collector's Survey in the Cemetery

டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: கல்லணையில் கலெக்டர் ஆய்வு

டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: கல்லணையில் கலெக்டர் ஆய்வு
டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கல்லணையில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தஞ்சை-திருச்சி மாவட்டங்களின் எல்லையில் உள்ள கல்லணைக்கு வந்தவுடன் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் திறந்துவிடப்படும். இதனால் கல்லணைக்கு நேற்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று மதகுகள் எல்லாம் முறையாக பராமரிக்கப்பட்டு இருக்கிறதா? என ஆய்வு செய்தார்.


பின்னர் கல்லணைக்கால்வாயில் மணல் திட்டுகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்படும் பணியையும், கல்விராயன்பேட்டையில் கல்லணைக்கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியையும் பார்வையிட்டு, அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உத்தரவு பிறப்பித்தார்.

குடிமராமத்து பணி

தஞ்சையை அடுத்த பூண்டி சின்னகுளம் தூர்வாரும் பணி குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர் அவர், நெய்குன்னம் ஐவேலி தோட்டத்தில் வெண்ணாற்றின் குறுக்கே நபார்டு நிதி ரூ.3 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு
திருவாரூரில் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி நெடுஞ்செழியன் ஆய்வு செய்தார்.
2. தீவன சோளம்-தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 100 சதவீத மானியத்தில் விதைகள் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
தீவன சோளம் மற்றும் தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 100 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
3. அமராவதி ஆற்றுநீர் செல்லும் வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்
அமராவதி ஆற்றுநீர் செல்லும் வாய்க்கால் களின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
4. கிசான் மன்தான் யோஜனா திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கலெக்டர் தகவல்
கிசான் மன்தான் யோஜனா திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
5. மதுரை மத்திய சிறையில் மும்பை ஐ.ஜி. திடீர் ஆய்வு
மதுரை மத்திய சிறையில் மும்பையை சேர்ந்த சிறைத்துறை ஐ.ஜி. தீபக் பாண்டே திடீர் ஆய்வு மேற்கொண்டார்.