மாவட்ட செய்திகள்

கழிவுநீர் கொட்டும் இடத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யக்கூடாது பொதுமக்கள் மனு + "||" + Public petition not to distribute drinking water from deep well

கழிவுநீர் கொட்டும் இடத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யக்கூடாது பொதுமக்கள் மனு

கழிவுநீர் கொட்டும் இடத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யக்கூடாது பொதுமக்கள் மனு
கழிவு நீர் கொட்டும் இடத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யக்கூடாது என மன்னார்குடி நகராட்சி ஆணையரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.
மன்னார்குடி,

மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் மற்றும் பாரி நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு முன்பு வ.உ.சி. சாலை மற்றும் பைபாஸ் சாலை ஆகியவற்றில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆர்.பி.சிவம் நகரின் அருகே நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுநீர் கொட்டும் இடத்தில் நகராட்சிக்கு சொந்தமான புல் வளர்க்கும் பகுதிக்கு பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.


தொற்று நோய்

கழிவு நீர் கொட்டும் பகுதில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீரால் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக இந்த கிணற்றில் இருந்து எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கூடாது. பழைய முறையிலேயே வேறு இடங்களில் இருந்து குடிநீரை வினியோகிக்க வேண்டும். மேலும் இதில் தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்களுடைய பகுதி வீடுகளில் உள்ள அனைத்து குடிநீர் இணைப்புகளையும் மீண்டும் நகராட்சி இடமே ஒப்படைக்கும் சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறுகையில், விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பிரச்சினை சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். முன்னதாக ஆர்.பி.சிவம் பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து ஆர்.பி.சிவம் நகர் மற்றும் பாரி நகர் பொதுமக்கள் நல சங்க தலைவர் வெங்கடாசலம் தலைமையில் ஊர்வலமாக மன்னார்குடி நகராட்சி நோக்கி வந்தனர். இதில் முன்னாள் தலைவர் ராஜரத்தினம், நிர்வாகிகள் பிரபாகர், சுந்தரமூர்த்தி, சிவராஜ் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி; மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு
இந்திய தலைமை நீதிபதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் கொண்டு வருவது பற்றிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது.
2. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு 15, 16-ந் தேதிகளில் வழங்கலாம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் இருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களை அ.தி.மு.க. வாங்க இருக்கிறது. இதற்காக மாவட்ட அளவில் மனுக்கள் வாங்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
3. புறம்போக்கு நிலத்தை அளக்க வந்த அரசு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
புறம்போக்கு நிலத்தை அளக்க வந்த அரசு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கைகோரி மனு
கரூர் (கருவூர்) மாவட்டத்தில் உள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
5. குமரி மாவட்டத்தில் சாலைகளை 16-ந்தேதிக்குள் சீரமைக்காவிட்டால் போராட்டம் கலெக்டரிடம், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மனு
குமரி மாவட்டத்தில் 16-ந் தேதிக்குள் சாலைகளை சீரமைக்காவிட்டால் 5 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கலெக்டரிடம், எச்.வசந்தகுமார் எம்.பி. மற்றும் 3 எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர்.