மாவட்ட செய்திகள்

புஷ்பவனம் திரவுபதையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் + "||" + Pushpavanam Thirupathiayamman Temple Themithi Festival

புஷ்பவனம் திரவுபதையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்

புஷ்பவனம் திரவுபதையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
புஷ்பவனம் திரவுபதையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனத்தில் திரவுபதையம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமையான இந்தகோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதை தொடர்ந்து தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மன் பரிவார தேவதையுடன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டம் முன்பு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
2. தவுட்டுப்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தவுட்டுப்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
3. மஞ்சம்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழா கிராமமக்கள் ஒன்றுகூடி தயார் செய்த கறிவிருந்து
மஞ்சம்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விருந்துக்காக கிராம மக்கள் ஒன்றுகூடி சமையல் செய்தனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கறிவிருந்து வழங்கப்பட்டது.
4. கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் சாமந்தி பூ சூறை விடப்பட்டது ரத்த சோறு சாப்பிட்டு பெண் பக்தர்கள் வழிபாடு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் சாமந்தி பூ சூறை விடப்பட்டது. பெண் பக்தர்கள் ரத்த சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.
5. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.