மாவட்ட செய்திகள்

ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேட்டி + "||" + Lake, ponds to be filled with water. Interview

ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேட்டி

ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேட்டி
ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி. கூறினார்.
தஞ்சாவூர்,

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டிய பிறகு டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சியினர் 2 நாட்களுக்கு முன் கூடி ஆலோசனை செய்து முடிவெடுத்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.


பல்வேறு கட்சியினர் தெரிவித்த கருத்தும், அரசின் கருத்தும் ஒத்துபோன நிலையில் 100 அடியை தாண்டியவுடன் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதை டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் வரவேற்கிறோம். வரும் தண்ணீரை முறையாக நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனதுறை ஆலோசகர் இன்று முதல் அணை மூடப்படும் ஜனவரி 28-ந் தேதி வரை கள ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி அரசின் ஆலோசனையோடு நீர்நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும்

காவிரி ஆற்றில் தற்போது அதிக அளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் திருப்பி வீணாக கடந்த காலங்களில் கடலில் கலந்ததுபோல் இல்லாமல் வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக்கால்வாய், வடவாறு உள்ளிட்ட ஆறுகளில் அதிக அளவு திறந்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங் களில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

கல்லணைக்கால்வாயில் கல்விராயன்பேட்டை, உளூர் பகுதிகளில் ஏற்பட்ட உடைப்புகள் இன்னும் 3 நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு முழு அளவு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறியுள்ளார்.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப, வெளியேற்றினால் கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த மசோதாவால் இலங்கை அகதிகளுக்கு பிரச்சினை இல்லை எச்.ராஜா பேட்டி
குடியுரிமை திருத்த மசோதாவால் இலங்கை அகதிகளுக்கு பிரச்சினை இல்லை என எச்.ராஜா தெரிவித்து உள்ளார்.
2. ரஜினி எப்போது கட்சி தொடங்குவார்? சத்திய நாராயண ராவ் பேட்டி
ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார்? என்பது குறித்து அவரது சகோதரர் சத்திய நாராயண ராவ் திருச்செங்கோட்டில் பேட்டி அளித்தார்.
3. வாகனங்களுக்கான காப்பீடு திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
வாகனங்களுக்கான காப்பீடு திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி கூறினார்.
4. ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி
ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் வருகிற 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
5. குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வர வேண்டும் ப.சிதம்பரம் பேட்டி
குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.