மாவட்ட செய்திகள்

மாமல்லபுரம் அருகே பஸ்- கார் மோதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் பலி + "||" + Bus-car collision near Mamallapuram, From Chennai 2 people Kills

மாமல்லபுரம் அருகே பஸ்- கார் மோதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் பலி

மாமல்லபுரம் அருகே பஸ்- கார் மோதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் பலி
மாமல்லபுரம் அருகே பஸ்-கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி இ.சி.ஆர். சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் புதுச்சேரி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.


இதில் கார் நொறுங்கி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

காரில் பயணம் செயத சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 27), சூரியராஜன் (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரில் பயணம் செயது காயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ராஜ்குமார், சூரியராஜன் ஆகியோரது உடல்கள் பிரேத பிரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2. சத்தீஸ்காரில் பஸ்சுக்கு தீ வைத்த நக்சலைட்டுகள்
சத்தீஸ்காரில் நக்சலைட்டுகள் பஸ் ஒன்றுக்கு தீ வைத்தனர்.
3. திருப்பரங்குன்றம் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் கார், 2 ஆட்டோக்கள் சேதம்; குடிபோதையில் ஓட்டியவரிடம் விசாரணை
திருப்பரங்குன்றம் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் 2 ஆட்டோக்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
4. சென்னையில் பணியாற்றிய வருமான வரி கமிஷனர் வீடுகளில் சோதனை - சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி
சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை, சென்னையில் பணியாற்றிய வருமான வரி கமிஷனர் வீடுகளில் சோதனை நடத்தியது.
5. மயிலம் அருகே, சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல், பதற்றம்-போலீஸ் குவிப்பு
மயிலம் அருகே சாமி ஊர்வலத்தின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆசிரியரின் தேர்வுகள்...

அதிகம் வாசிக்கப்பட்டவை