ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடு தீவிரம்


ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடு தீவிரம்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 8:09 PM GMT)

புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை,

இந்திய சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட் டையில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) காலையில் சுமார் 9 மணியளவில் சுதந்திர தினவிழா நடைபெற உள்ளது. விழா நடைபெறும் இடத்திற்கு காலை 9 மணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வருகிறார். இதைத்தொடர்ந்து கலெக்டர் உமாமகேஸ்வரி ஆயுதப்படை மைதானத்திற்கு வருகிறார்.

பின்னர் சுமார் 9.05 மணியளவில் கலெக்டர் உமா மகேஸ்வரி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இதைத் தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து போலீ சார், ஊர்க்காவல் படை, தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் உமா மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் ஏற்றுக்கொள்ள உள்ளனர். பின்னர் தியாகிகள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

ஏற்பாடு பணிகள் தீவிரம்

இதைத்தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து சிறப்பாக பணி யாற்றிய போலீசார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விருது கள் வழங்கப்பட உள்ளன. பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளான புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி, ஆயுதப்படை மைதானத்தில் உள்ள தேவையில்லாத மணல், கற்களை அகற்றும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல ஆயுதப்படை மைதானத்தில் உள்ள கொடி கம்பத்திற்கு வர்ணம் பூசும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து சுதந்திர தின விழாவிற்கு வரும் முக்கியமானவர்கள் அமர்வதற்கும், சுதந்திர தின விழாவை பார்வையிட வரும் பார்வையாளர்கள் அமர் வதற்கும் பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆயுதப்படை மைதானத்தில் முளைத்து உள்ள புற்களை அகற்றும் பணியும் தொடங்கி நடை பெற்று வருகிறது. இதேபோல போலீசார், தீயணைப்பு வீரர்கள், என்.சி.சி. மாணவ, மாணவிகள் போன்றவர்கள் சுதந்திர தின ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

சுதந்திரதினத்தன்று மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக, பல்வேறு இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், புதுக்கோட்டை ரெயில் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story