திண்டுக்கல் அருகே, விநாயகர் சதுர்த்தியையொட்டி தயாராகும் சிலைகள்


திண்டுக்கல் அருகே, விநாயகர் சதுர்த்தியையொட்டி தயாராகும் சிலைகள்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:30 PM GMT (Updated: 13 Aug 2019 8:53 PM GMT)

திண்டுக்கல் அருகே, விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்,

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்துவார்கள். அத்துடன் விநாயகருக்கு பிடித்தமான உணவு பொருட்களையும் படையல் வைப்பார்கள். மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ராட்சத வடிவங்களில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பா.ஜ.க., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படும். இதற்காக பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்து முன்னணி சார்பில் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஊர்வலம் நடத்துவதற்காக 1,000 சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.

பின்னர் அந்த சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் கரைப்பார்கள். சிலைகளை வைத்து வழிபாடு நடத்தும் போதும், ஊர்வலமாக எடுத்துச்செல்லும் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக் கும். குறிப்பாக பள்ளிவாசல் கள் அமைந்துள்ள பகுதிகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அதே போல் மற்ற அமைப்புகள் சார்பில் 100-க் கும் மேற்பட்ட சிலைகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. விநாயகர் சிலை தயாரிப்பு குறித்து திண்டுக் கல்லை அடுத்த நொச்சியோடைப்பட்டியை சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் கஜேந்திரன் கூறுகையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளில் வைத்து வழிபாடு நடத்துவதற்காக தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்பட்டு அவற்றுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் ஊர்வலத்தில் பங்கேற்கும் ராட்சத வடிவிலான சிலைகள் வடிவமைப்பு தொடங்கிவிடும். இதில் அனந்த சயனத்தில் இருக்கும் ரங்கநாதர் வடிவில் விநாயகர் சிலை 7 அடி உயரத்திலும், வீரசிவாஜி போன்று 8 அடி உயரத்தில் விநாயகர் சிலையும் உருவாக் கப்பட உள்ளது.

அத்துடன் சிங்கம், மயில் உள்ளிட்ட வாகனங்களுடனும் விநாயகர் சிலைகள் தயாரிக் கப்பட உள்ளன என்றார்.

Next Story