விவசாயிகளுக்கு ரூ.8 கோடி மதிப்பில் தேனீ பெட்டிகள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்


விவசாயிகளுக்கு ரூ.8 கோடி மதிப்பில் தேனீ பெட்டிகள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 9:18 PM GMT)

குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.8 கோடி மதிப்பில் தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் தேனீ வளர்ப்போர் உள்ளனர். இவர்களிடம் உள்ள 2 லட்சம் தேனீ குடும்பம் மூலம் ஏறக்குறைய 2 ஆயிரம் டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.

தோட்டக்கலைத்துறை மூலம் தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு தலா ரூ.32 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

ரூ.8 கோடி

குமரி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 2011-2012-ம் ஆண்டு ரூ.36 லட்சம் மதிப்பில் 150 விவசாயிகளுக்கும், 2012-2013-ம் ஆண்டு ரூ.9.36 லட்சம் மதிப்பில் 39 பேருக்கும், 2013-2014-ம் ஆண்டு ரூ.16.8 லட்சம் மதிப்பில் 70 பேருக்கும், 2014-2015-ம் ஆண்டு ரூ.38 லட்சம் மதிப்பில் 190 பேருக்கும், 2015-2016-ம் ஆண்டு ரூ.67.20 லட்சம் மதிப்பில் 280 பேருக்கும், 2016-2017-ம் ஆண்டு ரூ.48 லட்சம் மதிப்பில் 200 பேருக்கும், 2017-2018-ம் ஆண்டு ரூ.588.48 லட்சம் மதிப்பில் 1985 பேருக்கும் தேன் சட்டங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் ரூ.8.4 கோடி மதிப்பில் 2,914 விவசாயிகளுக்கு 45,690 தேன் சட்டங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story