தி.மு.க.-காங்கிரசால் மட்டுமே உரிமைகளை பெற்றுத்தர முடியும் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி


தி.மு.க.-காங்கிரசால் மட்டுமே உரிமைகளை பெற்றுத்தர முடியும் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 13 Aug 2019 11:45 PM GMT (Updated: 13 Aug 2019 9:56 PM GMT)

தமிழகத்தின் உரிமைகளை தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளால் மட்டுமே பெற்றுத்தர முடியும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

மானாமதுரை,

மானாமதுரையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே தமிழகத்தின் உரிமைகளை பெற்றுத்தர முடியும். காஷ்மீரில் இணையதளம், செல்போன் உள்ளிட்ட தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த மாநிலத்தின் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. காஷ்மீர் மாநிலத்தில் நடந்ததுபோல் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் இனி நடக்கலாம். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாத மாநிலத்தில் இது நடக்கக்கூடும்.

நடிகர் ரஜினிகாந்த் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர். நீட் தேர்வு, காவிரி பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் ரஜினிகாந்த் கருத்து கூற வேண்டும். அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வினருக்கு ஆதரவாக இருந்து தமிழகத்திற்கு விரோதமான அனைத்து மசோதாக்களுக்கும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்கின்றனர். ஆனால் ஒரு சட்டமன்ற தொகுதிக்கே ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறைவான தொகையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும். அந்த நிதியை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story