ராமநாதபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
ராமநாதபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள பாப்பனேந்தல் பகுதியை சேர்ந்த காசிநாதன் என்பவரது மகன் செல்வகுமார்(வயது23). இவர் கீழக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சில பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாராம். இதன்காரணமாக பெற்றோர் செல்வகுமாரை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த அவர் ராமநாதபுரம் பேராவூர் அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு சென்று விஷம் சாப்பிட்டார்.அந்த வழியாக சென்றவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த செல்வகுமாரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story