மாவட்ட செய்திகள்

சாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதல்: நிதி நிறுவன அதிபர் பலி + "||" + Motorcycle collision in the center of the road: Chancellor of financial institution kills

சாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதல்: நிதி நிறுவன அதிபர் பலி

சாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதல்: நிதி நிறுவன அதிபர் பலி
சாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலியானார்.
பல்லடம்,

பல்லடத்தில் சாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலியானார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் சேகாம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது26). பல்லடத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் நேற்று காலை சேகாம்பாளையத்தில் இருந்து காமநாயக்கன்பாளையத்திற்கு பணம் வசூல் செய்வதற்காக தனது மோட்டார்சைக்கிளில் சென்றார்.


கரையாம்புதூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் மையத்தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் தமிழ்ச்செல்வன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தமிழ்ச்செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த தமிழ்ச்செல்வனுக்கு ராணி (20) என்ற மனைவியும், யுகன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு: கிராமமக்கள் சாலை மறியல்
எல்லப்புடையாம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. சாலைகளில் தேங்கி கிடக்கும், மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
சாலைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. பட்டதாரி பெண் மர்ம சாவு: கணவர் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
பட்டதாரி பெண் மர்மமான முறையில் இறந்ததை கண்டித்து, அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெண்ணை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
4. மணப்பாறை ரெயில் தண்டவாளம் அருகே தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதை கண்டித்து சாலை மறியல்
மணப்பாறை ரெயில் தண்டவாளம் அருகே தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதன் காரணமாக அந்த பகுதியில் 2-வது நாளாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.