ரெயில் பயணிகளிடம் அபராதமாக வசூலித்த ரூ.33 லட்சத்துக்கு ‘வீடியோ கேம்’ விளையாடிய டிக்கெட் பரிசோதகர்
மத்திய ரெயில்வேயில் மூத்த டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியவர் புபேந்திரா வைத்தியா(வயது49).
மும்பை,
புபேந்திரா வைத்தியா பயணிகளிடம் இருந்து வசூலித்த அபராத தொகை ரூ.33 லட்சத்தை ரெயில்வேயிடம் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில், போலீசார் கடந்த வாரம் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதில், அவர் கையாடல் செய்த பணத்தை தானேயில் உள்ள பார்லர் ஒன்றில் ‘வீடியோ கேம்’ விளையாடி செலவிட்டதாக கூறி உள்ளார்.
Related Tags :
Next Story