இந்தி நடிகர்கள் வெள்ள பாதிப்புக்கு உதவவில்லையா? நடிகர் அமிதாப்பச்சன் பதில்


இந்தி நடிகர்கள் வெள்ள பாதிப்புக்கு உதவவில்லையா? நடிகர் அமிதாப்பச்சன் பதில்
x
தினத்தந்தி 14 Aug 2019 5:00 AM IST (Updated: 14 Aug 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சாங்கிலி, கோலாப்பூர், தானே, பால்கர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வரலாறு காணாத மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மும்பை,

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிவாரண நிதி குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மழை வெள்ள பாதிப்பில் இந்தி திரையுலகம் அமைதி காப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

இப்படி நினைப்பது சரியானது இல்லை. திரைத்துறையை சேர்ந்த பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அதைப் பற்றி விவாதிக்கவோ அல்லது அதைப் பற்றி ஊடகங்களுடன் பேசவோ இல்லை. அவர்களில் ஒருவர் உங்கள் முன் நிற்கிறேன். நான் செய்ததைப் பற்றி பேச எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஆனால் சிலர் யார் எவ்வளவு அதிகமாக செய்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story