மந்தாரக்குப்பத்தில், கோவில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு - வாலிபர் கைது


மந்தாரக்குப்பத்தில், கோவில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2019 10:15 PM GMT (Updated: 13 Aug 2019 11:02 PM GMT)

மந்தாரக்குப்பத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதி மஜீத்லைனை சேர்ந்த குப்புசாமி(வயது 65) என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு பூஜை முடிந்த பின்னர் குப்புசாமி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

பின்னர் மறுநாள் அதிகாலையில் பூஜை செய்வதற்காக வந்த குப்புசாமி, கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்த நிலையில் அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பூசாரி குப்புசாமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வந்தனர். இந்த நிலையில் மந்தாரக்குப்பம் பஸ்நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெய்வேலி ஆட்டோகேட் முருகன் கோவில் தெருவை சேர்ந்த தென்னரசு மகன் விக்னேஷ்(வயது 20) என்பதும், மந்தாரக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

Next Story