மாவட்ட செய்திகள்

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நீர்நிலைகளை தூர்வார முன்வர வேண்டும் - அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தல் + "||" + State and private sector rganizations need to clean Water level Minister Kamalakannan

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நீர்நிலைகளை தூர்வார முன்வர வேண்டும் - அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தல்

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நீர்நிலைகளை தூர்வார முன்வர வேண்டும் - அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தல்
வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக, காரைக்காலில் உள்ள நீர் நிலைகளை தூர்வார, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வரவேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தினார்.
காரைக்கால்,

முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து காரைக்கால் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு, குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால் பகுதிகளை தூர்வாரி பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தலைமையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக திருநள்ளாறு பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்று சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தில் கீழ், ரூ.3.50 லட்சம் நிதி ஒதுக்கி குமாரக்குடியில் மாதூர் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொள்ள முன்வந்தது.

அந்த பணியை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பெரிய, சிறிய குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, காவிரி நீர் வரும் சமயத்திலோ, பருவ மழையின்போதோ தண்ணீரை சேமித்து வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டப் பணி தொடங்கியது முதல் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும், இதுவரை சுமார் 30 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை அவர்களது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தில் நிதி ஒதுக்கியும், அரசுத் துறையினர் தங்களது நிதி பங்களிப்பில் பணிகளை செய்து வருவதும் பாராட்டுக்குரியது.

தற்போது, தொடங்கப்பட்ட மாதூர் வாய்க்கால் தூர்வாரும் பணி 8.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெறவுள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள 5 கிராமத்தினர் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம், தோட்டப் பயிர் சாகுபடியில் ஈடுபட முடியும். வெள்ள காலங்களில் வரும் அதிகப்பட்ச தண்ணீர் வடியவும் இந்த வாய்க்கால் பெரிதும் பயன்படும்.

மேலும், காரைக்காலில் சில அரசுத் துறையினர், தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தாமாக முன்வந்து இந்த சமூகப் பணியில் ஈடுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வருகின்றனர். நீராதாரத்தைப் பெருக்க செய்யும் இந்த அற்புதமான பணி என்பது சமூகப் பணியாகும். இதை நல்ல எண்ணத்தில் அணுகி அனைவரும் இந்த திட்டத்தில் தாமாக பங்கெடுத்துக்கொள்ள முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.