நீலகிரியில் தொடர்மழை, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது - உருளைக்கிழங்கு விலை கிடுகிடு உயர்வு


நீலகிரியில் தொடர்மழை, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது - உருளைக்கிழங்கு விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 12:06 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும்தொடர்மழைகாரணமாக மேட்டுப்பாளையம்மார்க்கெட்டுக்கு காய்கறிகள்வரத்து குறைந்தது. இதனால் உருளைக்கிழங்கு விலை கிடுகிடுவென உயர்ந்தது.

மேட்டுப்பாளையம்,

நீலகிரி மாவட்டத்தின் விவசாய விளை பொருள்களின் முக்கியவியாபார கேந்திரமாககோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் காந்தி மைதானம்,நெல்லித்துறைரோடு, பழைய நகராட்சி வீதி ஆகிய பகுதிகளில் 100-க்கும்மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகளும், 10-க்கும்மேற்பட்ட வெள்ளைப்பூண்டு மண்டிகளும் உள்ளன.

மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் 100-க்கும்மேற்பட்ட காய்கறி மண்டிகளும் உள்ளன. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகள் மற்றும் காய்கறி மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி,டர்னிப், நூல்கோல் ஆகிய காய்கறிகள் தினசரி லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

இதன் பின்னர் மண்டிகளில் காய்கறிகள் தரம் பிரிக்கப்பட்டு ஏலத்தில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதையடுத்து காய்கறி மூட்டைகள் கேரளா மற்றும் தமிழகத்தின்பிற பகுதிகளுக்குலாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் கேரளாவுக்குஅதிகளவுகாய்கறிகள் செல்கின்றன.இந்தநிலையில்கடந்தசில தினங்களாக தென்மேற்கு பருவமழை காரணமாகநீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவருகிறது.

மேலும், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தும், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தும் ஓடியது.

விவசாய விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியதால்காய்கறி பயிர்கள்மூழ்கி அழுகத் தொடங்கின. மேலும்முக்கிய சாலைகளும்பழுதடைந்தன. காய்கறிகள் தண்ணீரில் மூழ்கியதாலும், போதிய போக்குவரத்து வசதி இல்லாததாலும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு மற்றும் பல்வேறு காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

இந்த சீசனில்சுமார் 400 டன் முதல் 500 டன் வரை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரும். ஆனால் தற்போது சுமார் 30 டன் முதல் 50 டன் வரை தான் வந்து கொண்டிருக்கிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்னர் உருளைக்கிழங்கு 45 கிலோ கொண்ட மூட்டைரூ.900-ல் இருந்து ரூ.1400 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது உருளைக்கிழங்கு 45 கிலோ கொண்ட மூட்டைரூ.2000-ல் இருந்து ரூ.2800 வரை விற்பனை செய்யப்படுகிறது.வரத்து குறைவு காரணமாகவிலைகிடுகிடுவெனஉயர்ந்து காணப்படுகிறது. இதேபோல் வெள்ளைப்பூண்டு மற்றும்இதர காய்கறிகளின்விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.

பயிர்கள் சேதமானதால் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்குபல கோடிரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். காய்கறிகளுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள் ளனர்.

Next Story