காரமடையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் கேரள வாலிபர் கைது


காரமடையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 5:57 PM GMT)

காரமடையில் பள்ளி மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த கேரள வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காரமடை,

கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்த தம்பதியினர் மேட்டுப்பாளையத்தில் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுடைய 15 வயது மகள் காரமடையில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த மாணவி நேற்று முன்தினம் மாலைஅந்த பகுதியில் உள்ள கடைக்கு நோட்டு வாங்குவதற்காக சென்றார்.அந்த கடையில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொட்டிலிங்கஹவுஸ் பகுதியை சேர்ந்தமுனீர் (வயது 25) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். கடைக்கு உள்ளே இருக்கும் அறையில் நோட்டுகள் இருப்பதாக கூறியமுனீர், அந்த மாணவியை உள்ளே அழைத்து சென்றார்.

பின்னர் கடைக்குள் வைத்து முனீர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்து கடைக்கு வெளியே ஓடி வந்து விட்டார். இதைத்தொடர்ந்து அந்தமாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். பெற்றோர் உடனடியாக இதுகுறித்து காரமடை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதன் பேரில் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி முனீர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து முனீர் கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story