வடுவூர் அருகே விவசாயிகளுக்கு, விலையில்லா வண்டல் மண் வழங்கும் திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


வடுவூர் அருகே விவசாயிகளுக்கு, விலையில்லா வண்டல் மண் வழங்கும் திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 6:41 PM GMT)

வடுவூர் அருகே விவசாயிகளுக்கு, விலையில்லா வண்டல் மண் வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஆனந்த் தொடங்கிவைத்தார்.

வடுவூர்,

தமிழக அரசு ஏரி, குளங்களில் இருந்து விவசாயிகள் விலையில்லா வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை மேம்படுத்தி கொள்ள ஏரி, குளங்களில் இருந்து விலையில்லா வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி வடுவூர் அருகே உள்ள எடமேலையூர் மேற்கு குடிதாங்கி ஏரியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நேற்று கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வண்டல் மண்ணை வழங்கினார்.

இதில் உதவி கலெக்டர் புன்னியகோட்டி, பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் ரவீந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் பாலாஜி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அரிகிருஷ்ணன், எடமேலையூர் கூட்டுறவு சங்க தலைவர் முருகானந்தம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story