1,289 ஏரி-குளங்களில் தூர்வாரும் பணி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தகவல்


1,289 ஏரி-குளங்களில் தூர்வாரும் பணி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2019 4:30 AM IST (Updated: 15 Aug 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 1,289 ஏரி- குளங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.மந்திராசலம் கூறினார்.

ஒரத்தநாடு,

ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சுமார் ரூ.7½ கோடியில் 245 ஏரி-குளங்கள் தூர்வாரி மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கக்கரை கிராமத்தில் உள்ள இடநாச்சியார்குளம், பருத்திக்கோட்டை அய்யனார்குளம் உள்ளிட்ட குளங்களில் நடைபெற்று வரும் பணிகளை தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூர்வாரும் பணி

பாசன ஏரி- குளங்களை தூர்வாரி மேம்பாடு செய்து தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கும் மக்கள் தேவைக்கும் பயன்படுத்தும் நோக்கில்

தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,289 ஏரி- குளங்களை தூர்வாரி மேம்படுத்த சுமார் ரூ.50 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7½ கோடியில் 245 ஏரி- குளங்கள் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் தூர்வாரப்படாமல் கிடக்கும் ஏரி-குளங்களை மட்டுமே தூர்வார முடியும். தண்ணீர் செல்லக்கூடிய முக்கிய வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் முருகன், ஜான்கென்னடி, பொறியாளர்கள் இருந்தனர்.

Next Story