கட்டையன்குடிக்காடு பகுதியில் மீன்பிடி திருவிழா
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கட்டையன்குடிக்காடு கிராமத்தில் உள்ள குளத்தினை அப்பகுதி மக்கள் குடிநீர் குளமாக பயன்படுத்தி வருகின்றனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கட்டையன்குடிக்காடு கிராமத்தில் உள்ள குளத்தினை அப்பகுதி மக்கள் குடிநீர் குளமாக பயன்படுத்தி வருகின்றனர். கிராம மக்கள் பாதுகாப்புடன் பராமரிப்பு செய்து வருவதால் பெரும்பாலான ஆண்டுகள் இந்த குளம் வறண்டு போவது இல்லை. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் மழைப்பொழிவு குறைவாக இருந்ததால் தற்போது இந்த குளம் குறைந்த அளவு நீருடன் காட்சி அளிக்கிறது. இதையடுத்து அந்த குளத்தில் அப்பகுதி மக்கள் இணைந்து மீன்பிடி திருவிழாவை நடத்தினர். இதில் கிராமமக்கள் குளத்தில் இறங்கி பாரம்பரிய முறைப்படி கூடை மற்றும் கை வலைகளை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கெலுத்தி, சிலேபி, கெண்டை, விறால் உள்ளிட்ட மீன்களை பிடித்து சென்றனர். அதேபோல் செந்துறை பெரிய ஏரியிலும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதில் ஒருவருக்கு 10 கிலோ எடையுள்ள ஒரு ராட்சத தேலி மீன் கிடைத்தது. அதனை கண்ட கிராம மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Related Tags :
Next Story