மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி + "||" + Near Tiruvallur Breaking down 3 ATM machines Try to rob

திருவள்ளூர் அருகே 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி

திருவள்ளூர் அருகே 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி
திருவள்ளூர் அருகே 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் ஆந்திரா வங்கி உள்ளது. இந்த வங்கியுடன் இணைந்து ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை அந்த ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கு இருந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


இதுகுறித்து அவர் உடனடியாக அவர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது. அந்த ஏ.டி.எம் மையத்தில் காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல திருவள்ளூரை அடுத்த ராமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சிண்டிகேட் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். மையம் உள்ளது. அதன் சற்று தொலைவில் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த 2 ஏ.டி.எம். எந்திரங்களையும் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். ஏ.டி.எம். எந்திரங்களை உடைக்க முடியாததால் பணம் தப்பியது. இங்கும் காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது அதில் முகமூடி அணிந்திருந்த கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் - 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு
திருவள்ளூரை அடுத்த தொடுகாடு அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.
2. திருவள்ளூர் அருகே கத்திமுனையில் கடைக்காரரிடம் பணம் பறிப்பு; 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே கத்திமுனையில் கடைக்காரரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் மோதல்; வாலிபருக்கு வெட்டு, சகோதரர்கள் கைது
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாலிபருக்கு கத்தியால் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் கலெக்டர் அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைப்பெற சிறுபான்மையினத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
5. இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.