மாவட்ட செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று கிராமசபை கூட்டம் - கலெக்டர் தகவல் + "||" + Grama Sabha meeting in Kanchipuram district on Independence Day Collector Information

சுதந்திர தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று கிராமசபை கூட்டம் - கலெக்டர் தகவல்

சுதந்திர தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று கிராமசபை கூட்டம் - கலெக்டர் தகவல்
சுதந்திர தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர தினமான இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 633 கிராம ஊராட்சிகளிலும் தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் ஊராட்சி பகுதிகளில் நடக்கும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.


மேலும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் 14-வது மத்திய நிதி மானிய குழுவால் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மானிய நிதி கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் உற்பத்தி தடை செய்தல் குறித்தும் விவாதிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் - 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2. கிராம சபை கூட்டங்களை சரியான முறையில் நடத்த வேண்டும் - 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிராமசபை கூட்டங்களை சரியான முறையில் நடத்த வேண்டும் என்று 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.