மாவட்ட செய்திகள்

தியாகதுருகம் அருகே, தச்சு தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Near tiyakaturukam, Carpentry Worker Theft of money at home

தியாகதுருகம் அருகே, தச்சு தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தியாகதுருகம் அருகே, தச்சு தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தியாகதுருகம் அருகே தச்சு தொழிலாளி வீட்டில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே உள்ள சூளாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 65), தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தனது குடும்பத்தினருடன் சின்னசேலம் அருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தையும், வீட்டில் இருந்த குத்து விளக்குகளையும் காணவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்கவேல் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.40 ஆயிரத்தையும், குத்து விளக்குகளையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமைச்சர் மகன் வீட்டில் நகை, பணம் திருடிய 3 பேர் கைது
திண்டுக்கல்லில், அமைச்சர் மகன் வீட்டில் 50 பவுன் நகை, பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. விக்கிரவாண்டி அருகே, விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விக்கிரவாண்டி அருகே விவசாயி வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
வந்தவாசி அருகே மளிகை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
4. பரமத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பரமத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. சூளகிரி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
சூளகிரி அருகே அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றனர்.