மாவட்ட செய்திகள்

தாதா அனிஸ் இப்ராகிம் கூட்டாளி கைது: துபாயில் இருந்து வந்தபோது போலீசார் மடக்கினர் + "||" + Dada Anis Ibrahim partner arrested

தாதா அனிஸ் இப்ராகிம் கூட்டாளி கைது: துபாயில் இருந்து வந்தபோது போலீசார் மடக்கினர்

தாதா அனிஸ் இப்ராகிம் கூட்டாளி கைது: துபாயில் இருந்து வந்தபோது போலீசார் மடக்கினர்
மும்பையில் கடந்த ஆண்டு தொழில் அதிபர் ஒருவருக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் சகோதரர் தாதா அனிஸ் இப்ராகிம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்து இருந்தார்.
மும்பை,

தொழில் அதிபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாதா அனிஸ் இப்ராகிம் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய அனிஸ் இப்ராகிம் கூட்டாளி அல்டாப் லத்தீப் சையத் (வயது40) என்பவர் துபாய்க்கு தப்பி சென்றார். இதையடுத்து அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு விமானம் மூலம் வந்த அல்டாப் லத்தீப் சையத்தை கேரள போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு மோக்கா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை