மாவட்ட செய்திகள்

பஸ் மீது கல்வீசி தாக்கிய 2 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு + "||" + Tuticorin court sentenced to 4 years in jail for assaulting 2 persons

பஸ் மீது கல்வீசி தாக்கிய 2 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

பஸ் மீது கல்வீசி தாக்கிய 2 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் 2 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி கடந்த 28-09-2014 அன்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் புதுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் சென்ற போது, புதுக்கோட்டையை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மகன் அய்யப்பராஜ் (வயது 25), சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் (24) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் டிரைவர் முருகன் காயம் அடைந்தார்.


இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் சிறுவன் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் குற்றம் சாட்டப்பட்ட அய்யப்பராஜ், லட்சுமணன் ஆகிய 2 பேருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கலவை அருகே, அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் கல்வீச்சு - அண்ணன்- தம்பி கைது
கலவை அருகே, அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் கல்வீசிய அண்ணன்- தம்யை போலீசார் கைது செய்தனர்.
2. சண்டிகாரில் பயங்கரம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
சண்டிகாரில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. குஜராத்தில் சிறுமியை கற்பழித்த 2 பேர் அதிரடி கைது
குஜராத்தில் சிறுமியை கற்பழித்த 2 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
4. கள்ள நோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை - ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு
கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
5. புத்தாநத்தத்தில் பரபரப்பு, விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு - இந்து முன்னணியினர் சாலை மறியல்
புத்தாநத்தத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மர்ம நபர் கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து இந்து முன்னணியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.