மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில், நாளை மறுநாள் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறை கேட்கிறார் + "||" + At Kovilpatti, tomorrow, the next day, Kanimozhi MP He complains in public

கோவில்பட்டியில், நாளை மறுநாள் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறை கேட்கிறார்

கோவில்பட்டியில், நாளை மறுநாள் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறை கேட்கிறார்
கோவில்பட்டியில், நாளை மறுநாள் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறை கேட்க உள்ளார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாளை மறுநாள் (சனிக்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறார். அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியை தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு திட்டங்குளம், கொக்காம்பாறை, வடக்கு திட்டங்குளம், லாயல் மில் காலனி, தாமஸ்நகர், கூசாலிபட்டி, விசுவநாததாஸ் காலனி, லிங்கம்பட்டி, குலசேகரபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார். அப்போது மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில்பட்டியில் 556 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
கோவில்பட்டியில் 556 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
2. கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கீடு சமாதான கூட்டத்தில் முடிவு
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கீடு செய்வது என்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
3. கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பா.ஜனதாவினர் காத்திருப்பு போராட்டம் ஓடை புறம்போக்கு கடைகளில் மின் இணைப்பை துண்டிக்க கோரிக்கை
ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள கடைகளில் மின் இணைப்பை துண்டிக்க வலியுறுத்தி, கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பா.ஜனதாவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. உடல் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர்.
5. கோவில்பட்டியில் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க கோரி கோவில்பட்டியில் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.