மாவட்ட செய்திகள்

சரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடல் + "||" + Fish powder and oil producing plants to be closed for 4 days

சரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடல்

சரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடல்
சரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடப்பட்டு உள்ளன.
நெல்லை,

சரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடப்பட்டு உள்ளன.

இது குறித்து அகில இந்திய மீன் தூள் மற்றும் மீன் எண்ணெய் தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் சாகுல்அமீது கூறியதாவது:-


நாட்டில் மீன் தூள் மற்றும் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 52 உள்ளன. இதில் தமிழகத்தில் 13 தொழிற்சாலைகள் உள் ளன. இந்த தொழிற்சாலைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் 5-ம், நெல்லை மாவட்டத்தில் 3-ம் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் கடல் மீன்களான சாளை, சூரை, காரல் ஆகிய மீன்களை கொள்முதல் செய்து, அதை அரைத்து பவுடராக்கி அதில் மீன் தூள்கள், எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

மீன் விற்பனை, மீன் கொள்முதல் ஆகியவை வேளாண்மைத்துறையில் அடங்கும் என்பதால், இதற்கு இந்தியாவில் வரி கிடையாது. உலக நாடுகளிலும் இந்த பொருட்களுக்கு சர்வதேச அளவில் வரி கிடையாது. இந்தநிலையில் மத்திய அரசு 31-12-2018 அன்று மீன் தூள் உற்பத்திக்கு 5 சதவீதம் சரக்கு சேவை வரி செலுத்தவேண்டும் என்று அறிக்கை அனுப்பி உள்ளது. இந்த வரியை 1-7-2018 முதல் முன் தேதியிட்டு செலுத்தவேண்டும் என்றும் கூறி உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் நாங்கள் முறையிட்டு உள்ளோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த வரியை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கடந்த 10-ந் தேதி முதல் 4 நாட்களாக மூடப்பட்டு உள்ளன. இதனால் தினமும் தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரம் மீன் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். எங்களுடைய போராட்டத்திற்கு மீனவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மத்திய அரசு 5 சதவீத சரக்கு சேவை வரியை ரத்து செய்யவேண்டும். இல்லை எனில் நாட்டில் மீனவர்கள் புரட்சி வெடிக்கும்.

இவ்வாறு அவர் கூறி னார். அப்போது அவருடன் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துநாயகம், வெங்கடேஷ், ஜெயசுசீலா, அஸ்ரப்அலி, அந்தோணு ஆகியோர் உடன் இருந்தனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...