மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில், நாளை வேலைவாய்ப்பு முகாம் + "||" + Employment Camp at Mayiladuthurai tomorrow

மயிலாடுதுறையில், நாளை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில், நாளை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினம் கல்லூரியில் நடக்கிறது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் 18 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு, பிளஸ்- 2, பட்டப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், நர்சிங் மற்றும் பார்மசி படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.


மாற்றுத்திறனாளிகள்

10-ம் வகுப்பு, பிளஸ்- 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகளும் முகாமில் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (பயோ-டேட்டா) ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் வர வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
திருச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
2. கீரனூர், திருவேங்கைவாசல், வெம்மணியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
கீரனூரில் பேரூராட்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
3. நஞ்சைக்காளக்குறிச்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் அன்பழகன் ஆய்வு
நஞ்சைக்காளக்குறிச்சியில் சுகாதாரத்துறை சார்பில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார்.
4. பேராம்பூர் சேதமடைந்த பெரியகுளத்தின் மதகை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
முதல்-அமைச்சர் குறைதீர்க்கும் முகாமில் பேராம்பூரில் சேதமடைந்த பெரியகுளத்தின் மதகை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
5. தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
தனியார் நிறுவனங்களும்- தனியார் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலை வாய்ப்பு முகாம்“ பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.