மாவட்ட செய்திகள்

வியாசர்பாடியில் பயங்கரம்: காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு + "||" + In Vyasarpadi Congressman Cut and kill

வியாசர்பாடியில் பயங்கரம்: காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

வியாசர்பாடியில் பயங்கரம்: காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
வியாசர்பாடியில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கொண்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி டி.கல்யாணபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). காங்கிரஸ் பிரமுகரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் ஜெயக்குமார், நேற்று இரவு 8.30 மணியளவில் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்தது.


ஜெயக்குமார் என்னவென்று சுதாரிப்பதற்குள் அந்த மர்ம கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.

இதில் உடல் முழுவதும் 8 இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த ஜெயக்குமார் மயங்கி கீழே சரிந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிய ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
தஞ்சை அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. ஜெயங்கொண்டம் அருகே சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை
ஜெயங்கொண்டம் அருகே சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. நாமக்கல் அருகே காவலாளி கொலையில் 4 பேர் கைது ஆள்மாறாட்டத்தில் நடந்தது அம்பலம்
நாமக்கல் அருகே இரவு காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் ஆள்மாறாட்டத்தில் இந்த கொலை நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது.
4. பாகிஸ்தான் ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்துவந்த செய்தியாளர் வெட்டிக்கொலை
பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்துவந்த செய்தியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
5. கெங்கவல்லி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை
கெங்கவல்லி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...