அனாதை உடல்களை அடக்கம் செய்யும் மதுரை பெண் கலைவாணிக்கு மாநில இளைஞர் விருது - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


அனாதை உடல்களை அடக்கம் செய்யும் மதுரை பெண் கலைவாணிக்கு மாநில இளைஞர் விருது - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:00 PM GMT (Updated: 15 Aug 2019 10:56 PM GMT)

அனாதை உடல்களை அடக்கம் செய்யும் மதுரை இளம்பெண் கலைவாணிக்கு மாநில இளைஞர் விருதினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

மதுரை, 

மதுரை புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். அவருடைய மகள் கலைவாணி (வயது30). எம்.எஸ்சி. படித்துள்ளார். ஒரு டிரஸ்ட் மூலம் ஆதரவற்ற ஏழைகளுக்கும், அனாதை உடல்களை அடக்கம் செய்யும் சமூக சேவை பணியையும் மேற்கொண்டு வருகிறார். இவரது சேவையை பாராட்டி மாநில இளைஞருக்கான விருது கலைவாணிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை, சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். இது குறித்து கலைவாணி கூறியதாவது:-

சிறிய வயதில் இருந்தே சமூக சேவையில் மிகுந்த விருப்பம் உண்டு. எனவே தான் அது தொடர்பாக எம்.எஸ்சி. படிப்பை முடித்து இதயம் டிரஸ்ட்டில் என்னை இணைத்து கொண்டேன்.

அந்த டிரஸ்ட் மூலம் இதுவரை 1700-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை மீட்டு மறுவாழ்வு கொடுத்து இருக்கிறோம். 302 அனாதை உடல்களை அடக்கம் செய்து இருக்கிறோம். அதில் நான் சாலையில் சுற்றி திரிந்த ஆதரவற்ற 56 பேருக்கு மறுவாழ்வு ஏற்பத்தி கொடுத்து இருக்கிறேன். 36 உடல்களை நல்லடக்கம் செய்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story