மாவட்ட செய்திகள்

சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது + "||" + Central Near the railway station Cannabis kidnapping Including 4 women 6 arrested

சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது

சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கும்பல் ஆட்டோவில் கஞ்சா கடத்தி செல்வதாக பெரியமேடு போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. வேப்பேரி உதவி கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில் பெரியமேடு இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையிலான தனிப்படை போலீசார் குறிப்பிட்ட ஆட்டோவை கண்காணித்து எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.


அந்த ஆட்டோவில் 1½ கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களும், ரூ.2½ லட்சம் கஞ்சா விற்ற பணமும் கைப்பற்றப்பட்டது.

இதில், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி வேலழகிக்காக இந்த கும்பல் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக கஞ்சா கடத்தியதாக வேலழகியின் மகள் முத்துலட்சுமி (வயது 28), மருமகள் காந்திமதி (29), வளர்ப்பு மகள் ஆனந்தவள்ளி (32), முனியம்மாள் (48), சரண் (28) மற்றும் ஆட்டோ டிரைவர் கோகுல் தாஸ் (28) உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. புளியந்தோப்பில் உள்ள வேலழகியின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கும் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டு தப்பி ஓடிய வேலழகியையும் அவரது கணவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

* திருவொற்றியூர் சண்முகபுரத்தை சேர்ந்த கிரிஜா (23), குழந்தை இல்லாத ஏக்கத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

* செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் கத்தியை காட்டி வழிப்பறி செய்ததாக மணிகண்டன் (19), அருண் (19), ஆனந்த் (19), விஜய் (23) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், 5 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

* தேனாம்பேட்டை கவரைத்தெரு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (33), திருமணமாகாத விரக்தியில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

*சென்னை அபிராமபுரம் கே.வி.பி.தோட்டத்தை சேர்ந்த கனிமொழி(23), கல்லூரி படிப்பை முடித்த இவர், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.