ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டதை வரவேற்று அரக்கோணத்தில் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அரக்கோணம்,
வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சு.ரவி சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தார். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திர தின உரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளை தலைமையிடமாக கொண்டு 3 தனித்தனி மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றார்.
இதையடுத்து நேற்று வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டதை வரவேற்று சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
முகமதுஜான் எம்.பி. சிறப்புரையாற்றினார். அரக்கோணம் நகர செயலாளர் பாண்டுரங்கன் வரவேற்றார்.
விழாவில் அரக்கோணம் ஒன்றிய செயலாளர் இ.பிரகாஷ், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன், நகர அவைத்தலைவர் காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் பால்ராஜ்சீனிவாசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட துணைத்தலைவர் ஏ.வி.ரகு, நெமிலி கிழக்கு ஒன்றிய இளைஞர் பாசறை இணை செயலாளர் எல்.வினோத்குமார், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ஏ.எம்.நாகராஜன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் க.சரவணன், மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன், மாவட்ட தலைவர் ஜெகநாதன், தலைமை நிலைய பேச்சாளர் தம்பிஏழுமலை, த.மா.கா. நகர தலைவர் கே.வி.ரவிச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஜி.மோகன்காந்தி உள்பட அ.தி.மு.க கட்சியின் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story