தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
எட்டயபுரம்,
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தேசிய கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட துணை தலைவர் குணசேகரன், நகர தலைவர் ராஜேந்திரன், செயலாளர் வெங்கடாசலபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஏரல் காந்தி சிலைக்கு நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ஏரல் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அற்புதமணி தேசிய கொடியேற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். ஏரல் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் செயல் அலுவலர் சங்கர் தேசிய கொடியேற்றி, இனிப்பு வழங்கினார்.
ஆழ்வார்திருநகரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் தேசிய கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். அனைத்து வார்டுகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. டி.வி.எஸ். அறக்கட்டளை கள இயக்குனர் சாமிநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் ஆணையாளர் அரவிந்தன் தேசிய கொடியேற்றினார். தென்திருப்பேரை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பரமசிவன் தேசிய கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். பின்னர் அனைத்து வார்டுகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. கானம் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் பரமசிவன் தேசிய கொடியேற்றினார். பின்னர் அனைத்து வார்டுகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
ஆழ்வார்திருநகரி, குரும்பூர் போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தேசிய கொடியேற்றினார். குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. கோவில் நிர்வாக அலுவலர் இசக்கியப்பன், அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன், அறங்காவலர்கள் ஜெயமுருகன், சேர்மத்தங்கம், மோகனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குரும்பூர் அருகே நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் கல்விக்குழு தலைவர் அழகேசன் தேசிய கொடியேற்றினார். ஆவண எழுத்தர் முத்தணைந்த பெருமாள் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் திருநீலகண்டன், உதவி தலைமை ஆசிரியை மாலதி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
குரும்பூர் அருகே பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் மேல்நிலைப்பள்ளியில் பேராசிரியர் அசோக் தேசிய கொடியேற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு புத்தகப்பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி செயலாளர் சுப்பு நாடார், பள்ளி ஆட்சிமன்ற குழு தலைவர் துரை சுரேஷ்ராஜ், பொருளாளர் ஜெகன் மோகன், தலைமை ஆசிரியர் வித்யாதரன், உதவி தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில், லயன்ஸ் கிளப் தலைவர் புஷ்பராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் ஜெயாசண்முகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியை சத்யா நன்றி கூறினார்.
தூத்துக்குடி மேலூர் தூய பேட்ரிக்ஸ் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் சாமுவேல் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முடிவில் ஆசிரியை தமிழ்செல்வி நன்றி கூறினார்.
சாயர்புரம் அருகே உள்ள குலையன்கரிசல் அபிஷேகநாதர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குலையன்கரிசல் சேகரகுரு ஜெபவாசகன் ஆரம்ப ஜெபம் செய்தார். தொழில் அதிபர் ஆல்பர்ட் நாடார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி தாளாளர் சாந்தகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிர்பெனடிக்ட் சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி மாணவர் ஆண்ட்ரூஸ் வரவேற்றார். முன்னாள் விமானப்படை சார்ஜண்ட் ஜோசப் ஏனர்ஸ்ட் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. முடிவில் பள்ளி மாணவி ஹரினி நன்றி கூறினார்.
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரி முன்னாள் முதல்வர் கீதாலட்சுமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் வேதியியல் துறை தலைவர் கோகிலா சுபத்ரா கிறிஸ்டி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story