விவசாய நிலம் விவரங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பார்வைக்கு வைக்க ஏற்பாடு
விவசாய நிலம் தொடர்பான விவரத்தை கிராமநிர்வாக அலுவலகங்களில் வியாழக்கிழமைதோறும் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திட ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.
சாத்தூர்,
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், நல்லமுத்தன்பட்டி கிராமத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் தெரிவித்ததாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும், நகராட்சி அலுவலகங்களிலும் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் செயல்படும் பொது இ-சேவைமையங்களில் வருமானச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் உள்ளிட்ட 20 வகையான சான்றிதழ்கள் பெறுவதற்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலே அந்ததந்த கிராமங்களின் அருகில் உள்ள பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
விவசாயிகள் தங்களது நிலங்கள் குறித்த விவரங்களை ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் கிராம கணக்கு பட்டியல் மூலமாகவோ அல்லது இ- அடங் கல், பட்டா உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தில் இ- அடங்கல் என்ற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டு அதற்கான தகுதிகளுடன் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தர தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பசுமை வீடு திட்டத்தின் கீழ் 3 பேருக்கு தலா ரூ.2லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டிலும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 6 பேருக்கு தலா ரூ.1லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், திட்ட இயக்குனர்கள் சுரேஷ், தெய்வேந்திரன், வேளான் துறை இணை இயக்குனர் அருணாசலம், கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் அருணாச்சலக்கனி, சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து, சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story