சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் சோனியா காந்தியுடன்-மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு


சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் சோனியா காந்தியுடன்-மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 17 Aug 2019 5:48 AM IST (Updated: 17 Aug 2019 5:48 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேசினர்.

மும்பை,

மராட்டியத்தின் மேற்கு, வடக்கு பகுதி மாவட்டங்கள் மற்றும் கொங்கன் பகுதி மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. மாநில அரசு சார்பில் ரூ.6 ஆயிரத்து 813 கோடிக்கு நிவாரண திட்டம் தயாரிக்கப்பட்டு, அந்த தொகையை வழங்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மராட்டிய வெள்ள சேதம் குறித்து நேற்று மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினர். மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட், செயல் தலைவர்கள் பசவராஜ் பாட்டீல், யசோமதி தாக்குர், நிதின் ராவத், முசாபர் ஹூசேன் ஆகியோர் இந்த சந்திப்பில் இடம்பெற்ற னர். அப்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலவரம் ஆகியவை குறித்து அவர்கள் சோனியா காந்தியிடம் விவரம் அளித்தனர். மேலும் மராட்டிய சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Next Story